தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சேவை கிடையாது! லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற வலியுறுத்தப்படுகிறது.அதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர் கனிம வள டெண்டர் எடுத்துள்ளவர்களே சொந்தமாக லாரிகள் வாங்கி முறைகேடாக கனிம வளங்களை கொள்ளை அடிக்கின்றனர்.
அவ்வாறு கொள்ளை அடிப்பதனை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு போலீசாருக்கும் போக்குவரத்து துறையினருக்கும் லஞ்சம் கொடுகின்றனர்.அதனால் அவர்கள் இந்த கனிம வள கொள்ளையை கண்டுக்கொள்வதில்லை.இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக அதிக அளவு விபத்துகள் நடைபெறும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மணல் லாரிகளை இயக்க முடியாது என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி பால் வினியோகம் செய்ய கூடுதல் கட்டணம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கே.எம்.எப் நிறுவனத்திற்கு பால் சப்ளை செய்யும் நந்தினி லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.