நடிகர் சித்தார்த்க்கு இப்படி நடந்திருக்க கூடாது!! மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!!
இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான “சித்தா” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.அவருடன் நிமிஷா சஜயன்,அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் சித்தார்த் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.இந்நிலையில் சித்தா படத்தின் கதாபாத்திரம் அடுத்த 20 ஆண்டுகள் பேசுபொருளாக இருக்கும்.அனைவரின் மனதிலும் நிற்கும் என்றும் பட ப்ரோமோஷன் விழாவில் சித்தார்த் தெரிவித்திருந்தார்.அதேபோல் சித்தா படத்தின் கதை மற்றும் சித்தார்த் அவர்களின் நடிப்பு அனைவரையும் ஈர்த்து இருப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.படத்தின் ப்ரோமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் சித்தார்த் இதற்காக பெங்களூர் சென்றிருக்கிறார்.அங்கு படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த கன்னட அமைப்பினர் சிலர் தமிழ் படங்கள் இனி கர்நாடகாவில் ஓடாது.தமிழ் படத்திற்காக எந்த ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்ததால் சித்தார்த் அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறினார்.
ஏற்கனவே காவிரி விவகாரத்தால் தமிழ்நாடு – கர்நாடகாவிடையே மோதல் போக்கு தீவிரமடைந்து இருக்கிறது.தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.அதேபோல் தமிழ் படங்களை கர்நாடகாவில் வெளியிட கூடாது என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சித்தா பட ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த சித்தார்த் அவர்களை ப்ரோமோஷன் செய்யவிடாமல் கன்னட அமைப்பினர் வெளியேறும்படி சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.பெரும் சர்ச்சையாக வெடித்த இந்த விவாகரத்தில் சித்தார்த்க்கு ஆதரவாகவும்,கன்னட அமைப்பினரின் செயலுக்கு எதிராகவும் கன்னட நடிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதுபோல் நடிகர் பிரகாஷ் ராஜ் காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசிடம் முறையிடாமல் சாமானிய மக்களையும்,திரைக் கலைஞர்களையும் இன்னல்களுக்கு ஆளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஒட்டு மொத்த கன்னட மக்கள் சார்பாக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாக கருத்து பதிவிட்டு இருக்கிறார்.இந்நிலையில் தற்பொழுது இந்த கருத்து பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.