இந்த சின்ன முட்டைக்குள் இவளோ பெரிய வீசியமா இருக்கு!

0
202

இந்த சின்ன முட்டைக்குள் இவளோ பெரிய வீசியமா இருக்கு!!

 

முட்டைகள் பல்வேறு பெண் உயிரினங்களால் குறிப்பாக பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றால் இடப்பட்டு வருகின்றன. மனிதர்களால் ஆயிரக்கணக்கான வருடங்ககளாக சாப்பிடப்பட்டும் வருகிறது. பறவைகள் மற்றும் ஊர்வன இடும் முட்டைகள் மஞ்சள் மற்றும் வெள்ளைக்கருக்களைக் கொண்டு ஓடுகளால் பாதுகாக்கப்படுகின்றன.இ வை மக்களின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. வாத்து, காடை மற்றும் கெளதாரி முட்டைகளையும் விருப்பமான உணவாக உண்ணப்படுகிறது.முட்டையில் குறிப்பிட்ட அளவு புரதமும் உயிர்ச்சத்துகளும் உள்ளது. முட்டைகள் சமையலில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. முட்டைகள் ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்த போதிலும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் சலமெனெல்லா நோய்க்கிருமியின் மாசுபாடு மற்றும் முட்டை ஒவ்வாமை போன்றவற்றால் சுகாதார பிரச்சினைகள் எழக்கூடும்.

கோழி முட்டைகளின் பெரும் அளவிலான உற்பத்தி உலகளாவிய தொழிலாகும். 2009 ஆம் ஆண்டில், உலகளவில் 6.4 பில்லியன் கோழிகளினால் 62.1 மில்லியன் மெட்ரிக் டன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன.முட்டை சாப்பிடுவதால் இதய நோய் ஆபத்து வராது. இது இதய நோய்களின் ஆபத்தில் இருந்து உங்களை காக்கும்.உடலுக்கு மட்டும் அல்ல தலை முடிக்கும் சிறப்பு பங்காற்றுகிறது.முக்கியமாக ஏராளமானோர் தலைமுடி உதிர்வால் கஷ்டப்படுகிறார்கள். தலைமுடி அதிகம் உதிர்ந்தால், அதன் விளைவாக விரைவிலேயே வழுக்கைத் தலையை பெற நேரிடும். இது ஒருவரது இளமைத் தோற்றத்தைப் பாதிக்கும்.முட்டையில் அனைத்து விதமான அத்தியாவசிய புரோட்டீன்கள், தலைமுடியை வலிமைப்படுத்தும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.மேலும் முட்டை முடியில் உள்ள எண்ணெயை தக்க வைப்பதோடு தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

Previous articleபெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்!
Next articleஅரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில் பரபரப்பு!