இந்த காலகட்டத்தில் அனைவரும் ஒரு பிரச்சனையில் அவதிப்படுகிறோம் என்றால் அது சிறுநீரக பிரச்சினையாக மட்டுமே இருக்க முடியும்.சிறுநீரகக் கல், சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீரக தொற்று என்று பல விதமான சிறுநீரக நோய்கள் உலவி வருகின்றன. சிறுநீரக பிரச்சனை மக்களுக்கு மிகப் பெரும் அவதி ஆகவே உள்ளது.
நம் முன்னோர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்ததில்லையே எப்படி? அவர்கள் மருந்துகளையும் உட்கொள்ளவில்லை எப்படி இந்த பிரச்சினையை எதிர் கொண்டார்கள்?
பொதுவாக கிராமப்புறங்களில் பல்வேறு இடத்தில் இருக்கும் ஒரு சில கீரைகள் அவர்கள் நலமுடன் வாழ்வதற்கு மிகப் பெரும் உதவியாக இருந்து வந்துள்ளது.
அதில் ஒன்று தான் இப்பொழுது நாம் கூற விரும்பும் ஒரு அற்புதமான மூலிகை.காடு முழுவதும் பரவியிருக்கும் இந்தச் செடி உங்களை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வைக்கக் கூடிய ஒன்றாகும்.
அதன் பெயர்தான் மூக்கிரட்டை கீரை.
இது சிறுநீரக சம்பந்தமான நோய்கள், கல்லீரல் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் , மலமிளக்கி ,உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.
நாம் மருத்துவரை நாடிச் சென்று பல மருந்துகளை உட்கொண்டு இன்னும் பல உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றோம்.
எளிமையான முறையில் இந்தக் கீரையை நீங்கள் வீட்டில் சமைத்து உண்டால் இந்த அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.
சிறுநீரக பிரச்சனைக்கு:
சிறுநீரகப் பிரச்சனைக்கு மூக்கிரட்டை ஒரு மிகப்பெரிய மருந்தாக கருதப்படுகிறது மூக்கிரட்டை கீரையை எடுத்து அதில் தக்காளி, பருப்பு, பெருங்காயம், ஜீரகம் ஆகியவற்றை சேர்த்து கூட்டு போல சமைத்து உண்பதால் சிறுநீரக கல் அடைப்பு நோய் விரைவில் குணமடையும்.
சிறுநீரக இலைகளை பறித்து எடுத்து கொஞ்சம் சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் இரண்டே நாட்களில் வெளியேறும்.
மலச்சிக்கலுக்கு
மூக்கிரட்டை கீரையை பறித்து அதன் வேரை எடுத்து பூண்டு மற்றும் சீரகம் மற்றும் மஞ்சள், உப்பு சேர்த்து சூப் போல செய்து குடித்து வந்தால் மலமிளக்கி மருந்தாக மூக்கிரட்டை கீரை சூப் பயன்படுகிறது.
கண் பார்வைக்கு:
மூக்கிரட்டை இலைகளை எடுத்து பொன்னாங்கண்ணி கீழாநெல்லி மூன்றையும் சம அளவில் எடுத்து இடித்து மோரில் கலந்து குடித்து வர கண் பார்வை மங்கலாக தெரியும் அனைவருக்கும் இது ஒரு மிகப்பெரிய அருமருந்தாக பயன்படும் பார்வை தெளிவாகும்.
கல்லீரலுக்கு:
மூக்கிரட்டை கீரை கல்லீரலில் கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை பலப்படுத்த பயன்படும் மூக்கிரட்டை கீரை தக்காளி பருப்பு பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி கீரை போல உண்டு வந்தால் கல்லீரல் வலுவடையும்.
உடல் பருமனுக்கு:
உடல் எடை குறைய வேண்டும் என்று எண்ணதவர்களே ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது அப்படிப்பட்டவர்களுக்கு மூக்கிரட்டை கீரை ஒரு சிறந்த உடல் பருமனை குறைக்கும் அருமருந்தாகும்.காலையில் எழுந்தவுடன் இலைகளை பறித்து இஞ்சி பூண்டு மஞ்சள் கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து இடித்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்த வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்கும் பொழுது உடல் பருமன் விரைவில் சட்டென குறையும்.
இவ்வாறு மிகப்பெரிய 5 பிரச்சனைகளுக்கான அருமருந்தாக மூக்கிரட்டை கீரை பயன் படுகிறது தினசரி அதனை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளவும்.