அறியாமல் செய்யும் இந்த தவறுதலால் உங்கள் சிறுநீரகம் சீக்கிரம் செயல் இழந்து விடும்! மக்களே எச்சரிக்கை!

Photo of author

By Rupa

அறியாமல் செய்யும் இந்த தவறுதலால் உங்கள் சிறுநீரகம் சீக்கிரம் செயல் இழந்து விடும்! மக்களே எச்சரிக்கை!

நமது உடலில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். நமக்கே தெரியாமல் பல வழிகளில் அதனை செயலிழக்க பலவற்றை செய்து வருகிறோம். உடலில் உள்ள கழிவுகளை நீக்க சிறுநீரகம் பெரிதும் உதவுகிறது. அதனால் உங்களது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கியம். எந்தெந்த வழிமுறைகளில் நமது சிறுநீரகத்தை பாதிக்கிறது என்பதை இப்பதிவில் காணலாம்.

முதலாவதாக புரதம்:

அளவுக்கு அதிகமாக புரதம் எடுத்துக் கொண்டால் அது சிறுநீரக உறுப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் புரதம் ஆனது ரத்தத்தில் அமிலத்தை அதிக அளவு உருவாக்கும். இதனால் சிறுநீரகத்தால் அதிக அளவு அமிலத்தை அகற்ற முடியாமல் போகும். நாளடைவில் சிறுநீரகமும் செயலிழந்து விடும்.

இரண்டாவதாக அதீத உப்பு:

நாம் உணவில் அதிக அளவு உப்பை சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தை உயர்த்தும். இது சிறுநீரக செயல்பாட்டை பாதிப்படைய செய்யும். மேலும் சிறுநீரக கற்களை உருவாக்குவதில் உப்பிற்கு பெரும் பங்கு உள்ளது

மூன்றாவதாக மாத்திரைகள்:

எந்த ஒரு வலியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அதற்கு நிவாரணத்தை தேடி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார். அவ்வாறு இருப்பவர்களுக்கு விரைவிலேயே சிறுநீரகம் செயலிழந்து விடும். மேலும் சிறுநீரகப் புற்றுநோயும் உண்டாகும்.

நான்காவதாக உணவு:

நாம் உட்கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் சிறுநீரகங்களுக்கு அதிக அளவு பாதிப்பை சந்திக்கும்.

தூக்கமின்மை:

உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தூக்கம் மிகவும் அவசியம். அதிக நேரம் விழித்து இருப்பதால் சிறுநீரகத்தின் செயல்பாட்டில் மாற்றம் உண்டாகும். இதனால் விரைவிலேயே சிறுநீரக செயலிழப்பு உண்டாகிவிடும். இதுபோல பல காரணங்கள் உள்ளது மது அருந்துதல் போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது அதிக அளவு சர்க்கரை என நாம் அறியாமல் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் பெரிய பாதிப்பை கொண்டு வந்து விட்டு விடும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.