கொடிய நோய்களை பதம் பார்க்கும் இந்த காய்!! எந்தெந்த நோய்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும்?

Photo of author

By Divya

கொடிய நோய்களை பதம் பார்க்கும் இந்த காய்!! எந்தெந்த நோய்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும்?

Divya

உடல் ஆரோக்கியத்தை மேம்ப்படுத்துவதில் கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கொடிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட கடுக்காயை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

கடுக்காயில் காணப்படும் சத்துக்கள்:

**இரும்பு **கால்சியம் **மெக்னீசியம் **நார்ச்சத்து **புரதச்சத்து **வைட்டமின்கள் **நியாசின் **போலேட்

கடுக்காய் ஒரு சிறந்த மூலிகை பொருளாக பார்க்கப்படுகிறது.சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கடுக்காய் பொடியை சாப்பிடுவதால் தலைவலி முதல் கால் நமைச்சல் வரையிலான பாதிப்புகள் குணமாகும்.

கடுக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் தொண்டை சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.கடுக்காய் தேநீர் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்கி இரத்த விருத்தி அதிகரிக்க கடுக்காய் பானம் செய்து குடிக்கலாம்.

கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும்.செரிமானப் பிரச்சனையை குணப்படுத்திக் கொள்ள கடுக்காய் பானம் செய்து குடிக்கலாம்.கடுக்காய் பொடியை வெறும் வற்றில் சாப்பிட்டால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் ஏற்படாமல் இருக்கும்.

கடுக்காய் பொடியில் தேநீர் செய்து பருகினால் தலைவலி பாதிப்பு குணமாகும்.இருமல் குணமாக கடுக்காய் கசாயம் செய்து குடிக்கலாம்.பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக கடுக்காய் பொடியை பயன்படுத்தலாம்.

குடல் கழிவுகள் அகல கடுக்காய் பொடியை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.கடுக்காய் பொடி மஞ்சள் காமாலை நோயை குணமாக்கும்.கடுக்காய் பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெயில் கலந்து சாப்பிட்டால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.

கடுக்காய் நீர் பருகினால் வயிற்று வலி பாதிப்பு குணமாகும்.பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் கடுக்காய் பொடியை தண்ணீர் அல்லது பாலில் கலந்து பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கடுக்காய் பால் பருகலாம்.