இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கியது!!

0
94
This year's first Jallikattu competition started in Thachankurichi!!
This year's first Jallikattu competition started in Thachankurichi!!

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த போட்டி திகழ்கிறது. வழக்கமாக  பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது.

அதில் வாடிவாசல்களை கொண்டது மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காளையர்களுக்கும் அதிகம் உள்ள மாவட்டம் என்றால் புதுக்கோட்டை மாவட்டம் தான். அந்த வகையில் இந்த ஆண்டு 2025 தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 600 காளைகள் பங்கேற்றனர்.

புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டை ஒட்டி இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதை அடுத்து கோயில்களின் முன்பு காளைகளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும் 600 காளைகள் மற்றும் 320 மாடுபிடி வீரர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

Previous articleஅடுத்த வாரம் 10ஆம் தேதி டொன்லாடு டிரம்பிற்கு தண்டனை அறிவிப்பு!! ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு!!
Next articleஎதிரியுடன் கை கோர்த்த பாகிஸ்தான்!! திணறும் ஆப்கானிஸ்தான்.. ஆஹா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!