இந்த ராசி காரரே பண விஷயத்தில் உஷார்! இன்றைய ராசி பலன்!

Photo of author

By Rupa

இந்த ராசி காரரே பண விஷயத்தில் உஷார்! இன்றைய ராசி பலன்!

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம். புதிய திட்டம் மற்றும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் தொழிலில் பண இழப்புக்கள் ஏற்படும். உங்களது உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவுவர்.மேலும் இன்று நீங்கள் பொறுமையை மேற்கொள்வதன் மூலம் வெற்றி அடையலாம். இன்று உங்களுக்கு பண வரவு சற்று குறைந்தே காணப்படும். உங்கள் துணையிடம் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் வெற்றி வாகை சூடுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றி உகந்த நாள். உங்கள் செயற்திறன் மூலம் உங்கள் திறமை இன்று வெளிப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர். பணவரவு அதிகளவு காணப்படும்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். மேலும் புதிய நண்பர்கள் இன்று உங்களுக்கு கிடைப்பார்கள். அவர்கள் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக காணப்படும். மேலும் அதிக அளவு பணவரவு இருக்கும். உங்களதுஆரோக்கியமும் சிறந்த காணப்படும்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் உங்கள் பணிகள் இன்று சுமூகமாக நடைபெறும். உங்கள் துணையிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவுகள் சற்று குறைந்து காணப்படும்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் சில தடைகள் உண்டாகும். பொறுமையை கையாள்வதன் மூலம் வெற்றியடைவீர்கள். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் இல்லற வாழ்க்கை இன்று மகிழ்ச்சி ஏற்று காணப்படும். பணவரவும் சற்று குறைந்தே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் வெற்றி அடைவீர். இன்று நீங்கள் செய்யும் பணி திருப்திகரமாக இருக்கும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக காணப்படும். வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பண வரவுகள் கிட்டும். உங்கள் ஆரோக்கியம் மேலோங்கி காணப்படும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நாள் மந்தமாக காணப் படும். பின்வரும் விளைவுகளை தடுக்க பொறுமையை கையாள வேண்டும். உங்கள் பணியை சற்று கடினமாக உணர்வீர்கள். உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர். இன்று உங்களுக்கு பண பற்றாகுறை காணப்படும்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே நீங்கள் வெற்றியடைய அதிக அளவு முயற்சி செய்ய வேண்டும். இல்ல செய்யும் அலுவலகத்தில் பணி சூழல் சிறப்பாக செயலாற்ற முடியாது. வேலை செய்யும் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் நடைபெறும். மேலும் உங்கள் துணையிடம் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் இல்லற வாழ்க்கை நன்றாக அமையும். அதேபோல இன்று உங்களுக்கு வரவுக்கேற்ற செலவு காணப்படும்.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமையை கையாள வேண்டும். நீங்கள் செய்யும் வேலையில் அனுசரித்து நடப்பதன் மூலம் நன்மை உண்டாகும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிக அளவு காணப்படும். பண வரவுகள் சற்று குறைந்தே காணப்படும். உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நன்னாள். இன்று நீங்கள் முடிவுகள் எடுக்க உகந்த நாள். அலுவலகத்தில் உங்களது பணி சிறப்பாக காணப்படும். அதற்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமாக காணப்படுவீர். பணப்புழக்கம் சிறப்பாகவே காணப்படும்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவீர். நன்றி நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள் அல்ல. அதனால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம். இது கடினமான உழைப்பினால் நிறைவாக உங்களது பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக காணப்படும். உங்களுக்கு பணவரவுகள் அதிகரிக்கும். குறிப்பாக பூர்வீக சொத்து வகையில் பணவரவுகள் கிட்டும்.