தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!

Photo of author

By Parthipan K

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள நாணல்காட்டான்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோர் ,தனது பேரக் குழந்தையுடன் வசித்துவந்தனர்.நேற்று பிற்பகல் 2 மணியளவில் பேத்தி மற்றும் பேரன் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள், மாலை 6 மணி ஆகியும் முவரும் வீடு திரும்பாததால் பேரப்பிள்ளைகளை தேடும் பணியில் தாத்தா,பாட்டி ஈடுபட்டனர். தேடியும் கிடைக்காததால் வல்லநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் ஆய்வாளர் பார்த்திபன் புகாரை ஏற்று , உதவி ஆய்வாளர்கள் மற்றும் முறப்பநாடு போலீசார் ஆகியோருடன் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

காவலர்கள் அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விசாரணை நடத்தியபோது குழந்தைகள் வட வல்லநாடு காட்டுப்பகுதியில் சென்றதாக போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர், காட்டுப் பகுதிக்கு சென்று தவித்துக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளை இரவு 7 மணியளவில் மீட்டனர்.

பின்பு காவல் ஆய்வாளர் சிறுவர்களிடம் விசரித்த போது, தனது தாய் தந்தை இருவரும் சண்டை போட்டு பிரிந்து இருப்பதாகவும், நாங்கள் தாத்தா பாட்டி வீட்டில் வசிக்கிறோம் என்று கூறிய சிறுவர்கள்,மன அழுத்தத்தின் காரணமாக வீட்டை விட்டு சென்றதாக கூறினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் , சிறுவர்களுக்கு உணவளித்து அவர்களது தாத்தா பாட்டியிடம் சேர்த்தனர்.ஒரு மணிநேரத்தில் விரைந்து சென்று தேடும் பணியில் முயற்சித்த காவல்
ஆய்வாளர் பார்த்திபன், காவல் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ராஜா ராபர்ட் மற்றும் மற்றக் காவலர்களை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார். Hi