ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளையே தற்பொழுது விரும்பி உண்கிறோம்.உணவு கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டதால் அடிக்கடி வயிறு சம்மந்தபட்ட தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.
நார்ச்சத்து குறைவான உணவுகள்,காரசாரமான உணவுகள்,எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளால் வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது.
தொடர்ந்து ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் வயிற்றில் கெட்ட வாயுக்கள் அதிகளவு உருவாகி வயிறு வலியை ஏற்படுத்துகிறது.குளிர்காலத்தில் இந்த பாதிப்பு ஏற்படுவது பொதுவான ஒன்று என்றாலும் இவை உடலின் மற்ற பாகங்களுக்கு சென்றுவிட்டால் பெரிய பிரச்சனையாகிவிடும்.எனவே வாயுத் தொல்லையால் வயிறு வலி பாதிப்பை சந்தித்து வருபவர்கள் இந்த ஹோம் ரெடிமியை பின்பற்றி உரிய நிவாரணம் பெறுங்கள்.
புதினா இலை
கிராம்பு
ஒரு பாத்திரத்தில் 10 புதினா இலைகள் மற்றும் ஐந்து கிராம்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு பிழிந்து பருகினால் வயிறு வலி குணமாகும்.
செலரி விதைகள்
நாட்டு மருந்து கடையில் செலரி விதை பாக்கெட் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி செலரி விதை போட்டு கொதிக்க வைத்து பருகினால் வயிறு வலி குணமாகும்.
வெந்தயம்
சிறிதளவு வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் கலந்து பருகி வந்தால் வயிறு வலி குணமாகும்.
தயிர்
வெந்தயப் பொடி
ஒரு கப் தயிரில் ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிறு வலி பாதிப்பு குணமாகும்.அதேபோல் இஞ்சி தேநீர் செய்து பருகி வந்தால் வயிறு வலி,வாயுத் தொல்லை குணமாகும்.