கடலை எண்ணெயில் சமைப்பவர்கள்.. அதன் பகீர் உண்மையை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

0
595
Those who cook in peanut oil.. you will be shocked to know the truth of its secret!!
Those who cook in peanut oil.. you will be shocked to know the truth of its secret!!

நிலக் கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.இது ஒரு தாவர எண்ணெய் ஆகும்.நம் இந்தியாவின் தென் பகுதியில் இந்த கடலை எண்ணெய் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த கடலை எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த எண்ணெயில் வைட்டமின்கள்,தாதுக்கள்,கொழுப்பு அமிலங்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.

முடி,மூளை,எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கடலை எண்ணெய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.நம் சமையலில் பயன்படுத்தப்படும் இந்த கடலை எண்ணெய் ஆரோக்கியம் நிறைந்த ஒன்று.இந்த எண்ணெயில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் என்று இரு வகை இருக்கிறது.

வேர்க்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

1)வைட்டமின் ஈ
2)நிறைவுற்ற கொழுப்பு
3)கலோரி
4)மோனோசாச்சுரேடட்
5)பாலிஅன்சாச்சுரேடட்
6)ஒமேகா 6 கொழுப்பு அமிலம்

கடலை எண்ணெய் உடலில் தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. ஆஸ்துமா, இதய நோய், மூட்டு வலி, எடை இழப்பு போன்றவற்றிற்கு கடலை எண்ணெய் பெரிதும் உதவுகிறது. அதேபோல் பித்தப்பையில் உள்ள கற்கள் கரைய,எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட கடலை எண்ணையில் சமைத்த உணவுகளை உட்கொள்ளலாம்.

ஆனால் கடலை எண்ணையில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலம் சிலருக்கு உடலில் பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். இந்த எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உடல் அலர்ஜி, தோல் தடிப்பு, சிவந்து போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கடலை எண்ணையை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினால் உடல் எடை அதிகரித்து நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த எண்ணெயில் இருக்கின்ற ஒமேகா 6 கொழுப்பு அமிலம் கல்லீரல் ஆரோக்கியதத்தை பாதிக்கச் செய்துவிடும்.

இருதய பிரச்சனை இருப்பவர்கள் கடலை எண்ணையை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. சிலருக்கு கடலை எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் மூச்சு திணறல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கடலை எண்ணெய் உணவுகள் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்க வாய்ப்பிருக்கிறது. எனவே குறைவான அளவு கடலை எண்ணெயை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Previous articleஉங்கள் குலதெய்வத்தை இந்த நாளில் இப்படி வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும்!!
Next articleசர்க்கரை வியாதியை குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! தாமதம் இல்லாமல் உடனே செய்யுங்கள்!!