சுப நிகச்சிகளில் அசைவ உணவிற்கு பிறகு ஸ்ப்ரைட்,7up போன்ற சோடா பானங்கள் வழங்கப்படுகிறது.அசைவ உணவு செரிமானமாக தாமதமாகும்.உண்ட உணவு செரிமானமாகி ஏப்பம் வர இதுபோன்ற சோடாக்கள் அருந்தப்படுகிறது.
சோடா பானத்தை பருகிய உடனே ஏப்பம் வருவதால் உணவை செரிக்க வைக்கும் மருந்தாக இதை பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் இந்த பானங்களை உணவு உட்கொள்வதற்கு முன்பு குடித்தாலும் ஏப்பம் வரும்.இந்த சோடா பானங்களை சிலர் எனர்ஜி ட்ரிங்க் போன்று பருகுகின்றனர்.இந்த சோடா பானங்களில் கார்பனேட்டேடு மற்றும் இனிப்பு சுவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.
இந்த கார்பனேட்டேடு பானங்கள் உடலுக்கு பல பக்க விளைவுகளை கொடுக்கும் என்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை.சோடா பானங்களில் சேர்க்கப்படும் கூடுதல் சர்க்கரை உடலில் சுக்ரோஸ் அளவை அதிகரிக்க செய்கிறது.
சோடா பானங்களை அருந்தினால் உடலில் கலோரிகள் அதிகமாகிவிடும்.இதனால் உடல் பருமன்,சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் அதிகமாகிவிடும்.அளவிற்கு அதிகமான சோடா பானங்களை பருகினால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
சோடா பானங்கள் பல் ஆரோக்கியத்தை முழுமையாக சிதைத்துவிடும்.அளவிற்கு அதிகமாக சோடா பானங்களை பருகினால் பல் சிதைவு ஏற்படும்.வெறும் வயிற்றில் சோடா பானங்களை பருகினால் குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.வயிற்றில் அமில அளவு அதிகரித்து புண்கள் உருவாகிவிடும்.
வெறும் வயிற்றில் சோடா பானங்களை பருகினால் வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.
சோடா பானங்களை அதிகமாக பருகினால் மனச்சோர்வு அதிகமாகிவிடும்.சோடா பானங்களை பருகி வந்தால் இதய நோய் பாதிப்பு ஏற்படும்.எனவே சோடா பானங்களை பருகுவதை தவிர்க்க வேண்டும்.சோடா பானங்களை பருகி வந்தால் உடல் பருமன் அதிகரித்துவிடும்.எனவே இனி உணவு சோடா பானங்களை பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.