சில பெண்களின் மாதவிடாய் மிகுந்த வேதனை அளிக்க கூடியதாக இருக்கிறது.ஊட்டச்சத்து குறைபாட்டால் மாதவிடாய் காலத்தில் வயிறு வலி,அதிக இரத்தப் போக்கு,உடல் சோர்வு,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்துவிடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் நிச்சயம் கைகொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
1)வெற்றிலை – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை:
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வெற்றிலை தேநீர் அருந்தி வந்தால் வயிற்று வலி,இரத்தப் போக்கு,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.வெற்றிலை பானம் செய்வது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
*முதலில் ஒரு நல்ல வெற்றிலையை எடுத்து காம்பு நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
*பிறகு இதை தண்ணீரில் போட்டு இரண்டு அல்லது மூன்று முறை அலசி எடுக்க வேண்டும்.
*அடுத்து பாத்திரத்தில் இந்த வெற்றிலையை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
*பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.இந்த வெற்றிலை பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் மாதவிடாய் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக நீங்கும்.
தேவையான பொருட்கள்:
1)வெங்காயத் தாள் – சிறிதளவு
2)கருப்பு எள் – ஒரு தேக்கரண்டி
3)கருப்பு சீரகம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
*முதலில் வெங்காயத் தாளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.
*பிறகு அடுப்பில் வாணலி வைத்து கருப்பு எள் மற்றும் கருஞ்சீரகத்தை போட்டு லேசாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
*பின்னர் காய வைத்த வெங்காயத் தாளை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
*இந்த மூன்று பொருளையும் ஒன்றாக மிக்ஸ் செய்து சிறு சிறு உருண்டையாக உருட்டி தினமும் காலை மற்றும் மாலை என 2 உருண்டை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலி குறையும்.
தேவையான பொருட்கள்:
1)பிரண்டை துண்டு – ஐந்து
2)பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை:
*முதலில் பிரண்டையை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
*அடுத்து அதில் சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்து பருகினால் மாதவிடாய் வலி குறையும்.