இனிப்பு,புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று மூன்று சுவைகளை உள்ளடக்கிய நெல்லிக்காய் ராஜகனி என்று அழைக்கப்படுகிறது.இந்த நெல்லிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.நெல்லிக்காயில் பாஸ்பரஸ்,வைட்டமின்,இரும்பு,புரதம்,மாவுச்சத்து,நீர்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்காய் ஆப்பிளை விட அதிக சத்துக்கள் நிறைந்த கனியாக திகழ்கிறது.ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு அதிக சத்துக்களை இக்கனி கொண்டிருக்கிறது. இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி செய்ய நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க நெல்லிச் சாறு பருகலாம்.நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் சி உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து கட்டுக்கோப்பாக இருக்க உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுகிறது.இந்த காயில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.கால்சியம் குறைபாட்டை போக்கி எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும் நெல்லிக்காய் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளது.
யாரெல்லாம் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது?
ஒவ்வாமை உள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நெல்லிக்காய் உட்கொள்ளக் கூடாது.
உயர் இரத்த அழுத்தம், பல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் நெல்லிக்காயை தவிர்ப்பது நல்லது. சிறுநீரக கல் மற்றும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்பு உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.