இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!!
நாட்டில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க அந்தந்த மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன.
அதன் ஒரு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க கூடிய சுற்றுலா பயணிகள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் சிம்ஸ் பூங்கா போன்ற அனைத்து சுற்றுலா மையங்களுக்கும் வருபவர்கள் கட்டாயம் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி நிச்சயம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இரண்டு தவணை தடுப்புசிகளையும் செலுத்தி இருப்பதற்கான கொரோனா தடுப்பூசி சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரே சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள நிலையில், செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.