முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது கைது நடவடிக்கை? நீதிமன்ற அளித்த திடீர் உத்தரவு!

0
216
O Panneerselvam
O Panneerselvam

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது கைது நடவடிக்கை? நீதிமன்ற அளித்த திடீர் உத்தரவு!

கடந்த பத்தாண்டுகளாக அதிமுக வானது ஆட்சி அமர்த்தியது. கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக மற்றும் அதிமுக இடையே பெரும் போட்டி நிலவி வந்தது. அப்போது இரு கட்சிகளும் தாங்கள் வெற்றி பெற வேண்டுமென்று பல வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தனர். அதில் பல வாக்குறுதிகள் பொய்யானவை ஆகவே காணப்பட்டது. மேலும் தேர்தலில் போட்டியிட இருப்பவர்கள் வேட்பு மனுதாக்கல் அளிக்கும் பொழுது தங்களின் சொத்து விவரங்கள் குறித்தும் முழுமையாக கூற வேண்டும்.

ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் 2019ஆம் ஆண்டு தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தங்களின் வேட்பு மனு தாக்கல் அளிக்கும் பொழுது பொய்யான சொத்து விவரங்களை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதை வைத்து வெற்றி பெற்றுள்ளனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் தான் மிலானி. இவர்,இவ்வாறு முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் இவ்வாறான சொத்து விவரங்களை மறைத்து  மனு தாக்கள் செய்து ,வெற்றி பெற்றுள்ளார் என்பதை அறிந்துள்ளார்.

இதனை  வெளியே கொண்டுவர தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எம்பி ,எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் வேட்பு மனுவுடன் தங்கள் சொத்து விவரங்களை மறைத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது புகார் மனு அளித்துள்ளார்.

இந்த மனு வானது சிறப்பு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மாஜிஸ்திரேட்டு கூறியது, புகார் மனு வந்ததையடுத்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவிந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கூறி இரு மனுக்கள் மீதும் தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அதுமட்டுமின்றி விசாரணையின் அறிக்கையை வருகிற பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முன்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல இந்த வழக்கில் வாரண்ட் இல்லாமல் அவர்களை கைது செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

மனு அளித்தவர்க்கும் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார். திடீரென்று முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்ததால் அதிமுக தலைமை சற்று பரபரப்பாக காணப்படுகிறது.

Previous articleஇரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!!
Next articleஒரு வாரத்தில் இரண்டு கோடியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here