அதீத சுவை நிறைந்த பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.காலையில் பப்பாளி பழம் சாப்பிடுவதால் மலத்தை எளிதில் வெளியேற்ற முடியும்.இதனால் மலச்சிக்கல் பிரச்சனையே தங்களுக்கு ஏற்படாது.பப்பாளி பழத்தில் பொட்டாசியம்,கால்சியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பச்சத்து,நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.
பப்பாளி பழத்தில் பப்பேன் எனும் நொதி இருக்கிறது.இது செரிமான பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது.கண் பார்வை குறைபாட்டை போக்கும் வைட்டமின் ஏ சத்து பப்பாளி பழத்தில் நிறைந்திருக்கிறது.
தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம்.சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் பப்பாளி பழத்திற்கு இருக்கிறது.தொடர்ந்து பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி அதிகரிக்கும்.ஆண்மை தன்மை அதிகரிக்க பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரலாம்.
இப்படி பப்பாளியின் நன்மையை சொல்லிக் கொண்டே இருக்கலாம்.அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் இந்த பழத்தை பெரியவர்,சிறியவர் என்று யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.ஆனால் இதில் எந்த அளவிற்கு ஆரோக்கியம் நிறைந்து காணப்படுகிறதோ அதேபோல் ஆபத்தும் நிறைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.சிலருக்கு பப்பாளி பழம் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பம் தரித்த பெண்கள் பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது.பப்பாளி பழத்தில் லேடெக்ஸ் என்ற கலவை இருக்கிறது.இது கருக்கலைப்பிற்கு வழிவகுத்துவிடும்.இதயத்தை காக்கும் பப்பாளி பழத்தில் சயனோஜெனிக் கிளைகோசைட்ஸ் என்ற அமிலம் உள்ளது.இது ஒழுங்கற்ற இதய துடிப்பு பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆபத்தை விளைவித்துவிடும்.எனவே சீரற்ற இதய துடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி பழத்தை தவிர்த்துவிடுவது நல்லது.
குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது.பப்பாளி பழத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்கும் பண்புகள் அதிகம் உள்ளது.குறைந்த இரத்த சர்க்கரை பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடும்.
அதேபோல் சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் அதிகளவு பப்பாளி பழம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி பழத்தை தவிர்ப்பது நல்லது.