இந்த சூரணத்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து குடிப்பவர்களுக்கு.. தைராய்டு பிரச்சனையே வராது!!

Photo of author

By Divya

இந்த சூரணத்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து குடிப்பவர்களுக்கு.. தைராய்டு பிரச்சனையே வராது!!

Divya

பெண்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் தைராய்டு பாதிப்பை மருத்துவ சிகிச்சை இன்றி குணப்படுத்திக் கொள்ள இங்கு தரப்பட்டுள்ள சித்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தைராய்டு அறிகுறிகள்:-

**சீரற்ற மாதவிடாய் பாதிப்பு
**முடி உதிர்வு
**உடல் எடை அதிகரிப்பு
**பருக்கள் அதிகரித்தல்

தைராய்டு பாதிப்பை குணப்படுத்தும் மூலிகை தேநீர்:

தீர்வு 01:

1)சதகுப்பை – 20 கிராம்
2)தனியா விதைகள் – 100 கிராம்
3)சீரகம் – 20 கிராம்
4)சோம்பு – 20 கிராம்
5)வெந்தயம் – 20 கிராம்
6)கருப்பட்டி – தேவையான அளவு

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை அளவிற்கேற்ப வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இவை அனைத்தையும் தனி தனியாக வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.(இதில் சதகுப்பை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)

அதன் பின்னர் இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பவுடரை ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்து வைத்துள்ள மூலிகை பொடி இரண்டு தேக்கரண்டி அளவு அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த நீரை நன்றாக காய்ச்ச வேண்டும்.இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.

தீர்வு 02:

1)மந்தாரை பட்டை பொடி – 100 கிராம்
2)கருப்பட்டி – தேவையான அளவு

நாட்டு மருந்து கடையில் மந்தாரை பட்டை பொடி அதாவது மந்தாரை சூரணம் கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி மந்தாரை சூரணம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்து வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.

தீர்வு 03:

1)தேங்காய் துண்டுகள் – கால் கப்
2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் பாலை வடிகட்டி பருகி வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.அதேபோல் கொத்தமல்லி விதை தேநீரை பருகி வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.