News, Breaking News, Crime, State

சூப்பர் மார்க்கெட் வைத்து இருப்பார்களே உஷார்!! நூதன முறை திருட்டு போலீசார் எச்சரிக்கை!!

Photo of author

By Jeevitha

சூப்பர் மார்க்கெட் வைத்து இருப்பார்களே உஷார்!! நூதன முறை திருட்டு போலீசார் எச்சரிக்கை!!

தற்போது எல்லாம் பல வகையில் திருட்டு நடைபெற்று வருகிறது. மேலும் அதிக அளவில் நூதன மோசடி நாடு முழுவதும் அரகேறி வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாசுதேவனுர் கிராமத்தில் மங்கையர்க்கரசி என்பவர் சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறார்.

இதனையடுத்து வழக்கம் போல் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கி உள்ளார். அதனை தொடர்ந்து அவர் வாங்கிய பொருட்களை எடுத்து செல்லமால் 1400  ரூபாய் விலைக்கு ஒரு அரிசி மூட்டையை வாங்கி உள்ளார். மேலும் அதனை மட்டுமே எடுத்துக் கொண்டு எனக்கு 2000 ரூபாய் தாருங்கள் என்றும் கேட்டுள்ளார்.

அதனையடுத்து அவர் வீட்டியில் அரிசி மூட்டையை வைத்து விட்டு மளிகை பொருட்களை வாங்க வரும் போது அனைத்து பணத்தையும் மொத்தமாக கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். அவரை நம்பி சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் 2000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அதன் பிறகு பல மணி நேரங்கள் கடந்தும் அவர் திரும்ப வரவில்லை.

அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஏமாற்றிய அந்த நபரை தீவரமாக தேடி வருகிறார்கள்.

கல்லூரி மாணவிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!

வாடிக்கையாளர்களுக்கு வெளியான சூப்பரான நியூஸ்!! பிரபல வங்கி வெளியிட்ட அருமையான திட்டம்!!