மதியம் தூங்குபவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வருமாம்.. மக்களே எச்சரிக்கை!!
நம்மில் பலருக்கும் மதியம் தூங்கும் பழக்கம் கட்டாயம் இருக்கும். பொதுவாகவே நமது உடல் அதிக அளவு வேலைகளை செய்யும் பொழுது சிறிதளவு ஓய்வெடுத்தால் நல்லது என்பது தான் தோன்றும். அவ்வாறு மதியம் ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக உறங்கினால் நமது உடலில் பல நோய்கள் உண்டாகும்.
பொதுவாகவே மதிய நேரத்தில் நாம் ஓய்வெடுத்தால் 30 நிமிடத்திற்குள் மேலாக எடுக்கக்கூடாது என மருத்துவர் ரீதியாக கூறுகின்றனர். ஏனென்றால் 30 நிமிடத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு கட்டாயம் சர்க்கரை வியாதி வரக்கூடும் எனக் கூறுகின்றனர்.
சர்க்கரை வியாதி வந்துவிட்டால் அதன் தொடர்ச்சியாக கண் பார்வையில் பிரச்சனை சிறுநீரகம் செயலிழப்பு போன்றவை அடுத்தடுத்து உண்டாகிவிடும். அது மட்டும் இன்றி மதிய நேரத்தில் தூங்குபவர்களுக்கு இருதய நோய் கூட வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாம்.
இவ்வாறு மதியம் தூங்குவது பெரியோர்களுக்கு மட்டும் தான் கெடுதலே தவிர குழந்தைகளுக்கு அல்ல. குழந்தைகள் அதிக நேரம் மதிய நேரத்தில் உறங்கினால் அவர்களின் நினைவு ஆற்றல் அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி குழந்தைகள் மதிய நேரத்தில் உறங்கும் பொழுது அவர்களுடைய செரிமான ரீதியான அனைத்தும் சீராக செயல்படும். இனிவரும் நாட்களில் பெரியவர்கள் மதிய நேரத்தில் உறங்கும் பொழுது அரை மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.