தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு பொருள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்து வந்தார்.
மறுபுறம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்கள் மீது ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம் என தெரிவித்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு நடைபெற்ற மொழிப்போரில் நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் எம் பி களை தரை குறைவாக பேசியது மிகுந்த கண்டனத்திற்கு ஆளானது. அதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதாணுக்கு பல்வேறு வகையில் கேள்விகளை எழுப்பியதுடன் அவருடைய உருவ சிலைகளும் எரிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட சூழலில் நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் முதலில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கிய அதாவது மார்ச் 15 2024 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கிய தமிழக அரசு தற்பொழுது பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அதனை மறுப்பதாகவும் அதற்கான ஆதாரத்தை தான் வெளியிடுவதாகவும் தெரிவித்து ஒப்புதல் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த ஒப்புதல் கடிதத்தின் மீது பலருக்கு அதிருப்தி இருந்த பொழுதிலும் பல பொதுமக்கள் இதற்கு என்னதான் முடிவு என்பது போல் குழப்பத்தில் இருக்கக்கூடிய சூழலில் தர்மேந்திர பிரதான அவர்கள் வெளியிட்ட ஒப்புதல் கடிதத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதிலளித்திருக்கிறார்.
அன்பில் மகேஷ் அவர்கள் ஒப்புதல் கடிதத்தை மறுத்து தெரிவித்திருப்பதாவது :-
தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கைக்கு தாங்கள் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் இது குறித்து கலந்த ஆலோசித்து விட்டு அதன் பின்பு தெரியப்படுத்துகிறோம் என்று தான் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த ஒப்புதல் கடிதத்தில் எந்த ஒரு இடத்திலும் தேசிய கல்விக் கொள்கை தமிழகம் ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிடப்படவில்லை என்றும் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்.