மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!!

Photo of author

By Parthipan K

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!!

Parthipan K

Three month old baby boy left at Mariamman temple !!

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்னும் ஆரணி பாளையம் என்ற காந்தி ரோட்டில் உள்ள சிறிய மாரியம்மன் கோவிலில் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் நவக்கிரக சன்னதியில் மூன்று மாத ஆண் குழந்தையை புத்தம் புதிய உடைகளை அணிவித்து விட்டுச் சென்றுள்ளனர்.நீண்ட நேரம் கழித்தும் கூட குழந்தையை யாரும் தேடி வரவில்லை.கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஆரணி காவல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் கோவிலுக்கு சென்று அங்கு கிடந்த 3 மாத ஆண் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். குழந்தை நன்றாக ஆரோக்கியமாக இருந்தது இதையடுத்து மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் தகவல் தெரிவித்தார்கள்.

மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் அந்தஆண் குழந்தையை ஒப்படைக்கப்பட்டது.இந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். குழந்தையை விட்டுச் சென்றவர்கள் ஏன் விட்டு சென்றார்? குழந்தையை கடத்தி விட்டு சென்றார்களா? இல்லை கள்ள உறவில் பிறந்த குழந்தையா? அல்லது வறுமையில் விட்டுச் சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.