மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Photo of author

By Parthipan K

மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Parthipan K

இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை தமிழக அரசு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆணையை காவல்துறைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

போலீஸ் ஆபரேஷனில் ஐ.ஜி.யாக பணிபுரிந்த என்.பாஸ்கரன் ,
தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பயிற்சிப் பள்ளியின் ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி மகேந்தர் குமார் ரத்தோட் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

சென்னையில் வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜெய கவுரியை, தமிழக ரயில்வே காவல் துறை டிஐஜியாக நியமித்துள்ளார்.

தமிழக ரயில்வே காவல்துறை டிஐஜியாக இருந்த எம்.பாண்டியன் ஐபிஎஸ் அவர்களை, சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை பணிமாற்றம் செய்ததற்கான காரணத்தை தமிழக அரசு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.