தடை செய்யப்பட்ட சீன ஆஃப்களை மீண்டும் வேறொரு பெயரில் இந்தியாவினால் கொண்டுவர சீனா செய்த சதித்திட்டம்?

0
206

இந்திய-சீன எல்லைப் பிரச்சனை நடந்து முடிந்துள்ள நிலையில் சீன இந்தியாவின் நாட்டு ரகசியத்தை திருடுவதாக தகவல் வந்து பல ஆட்களை இந்தியாவில் தடை செய்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இருந்த டிக் டாக் ,ஹலோ, ஷேரிட், யூசி பிரௌசர் போன்ற 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது மத்திய அரசு .

இருப்பினும் இந்த ஆப்களைப் போலவே டிக் டாக் லைட், ஷேரிட் லைட் லைட்,யூசி பிரௌசர் லைட், போன்ற ஆப்களின் போலியை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து சீனாவிற்கு சொந்தமான பாய்டு (Baidu) மற்றும் வெய்போ (Weibo) ஆகிய செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதை தொடர்ந்து , அவை இரண்டும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோன் ஆப் ஸ்டோர்களில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களில் டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் என குறுக்கு வழியில் குளோனிங் (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் நுழையத்தொடங்கின.
இது போன்ற போலியான 47 சீன ஆப்களுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.இந்த நிலையில், தடை செய்யப்பட்ட 47 செயலிகளின் பட்டியலில் சீனாவின் மிகப்பிரபலமான பாய்டு மற்றும் வெய்போவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அரசு தொழில்நுட்பக் கொள்கை போன்றவற்றின் விதிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது அவை இரண்டும் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோன் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து,பாய்டு மற்றும் வெய்போ செயலிகள் இரண்டும் சீனாவின் முக்கியமான இணையதளங்கள் ஆகும். உலகம் முழுவதும், தினந்தோறும் 174 கோடிக்கும் அதிகமானோர் பாய்டு தேடுபொறியைப் பயன்படுத்தி வருகின்றனர். சீனா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வெய்போ சீனாவின் முன்னணி சமூக இணையதளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இதில் இந்தியா – சீனா இடையே நல்லுறவை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கணக்கு வைத்திருந்தார்.தடை செய்யப்பட்ட 47 செயலிகளின் பட்டியலில் செர்த்து தற்போது வரை மத்திய அரசல் தடை விதித்துள்ள சீன ஆப்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleமூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Next article 2025ல் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி: மத்திய அரசு இலக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here