கள்ளச் சாராயத்திற்கு மூன்று பேர் பலி! கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது!!

Photo of author

By Sakthi

கள்ளச் சாராயத்திற்கு மூன்று பேர் பலி! கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது!
தமிழ் நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கள்ளச் சாராயம் காய்ச்சிய நபரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை  சேர்ந்தவர் அமரன். இவர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றுள்ளார். இதில் நேற்று கள்ளச் சாராயம் குடித்த 11 நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர். புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச் சாராயம் காய்ச்சிய விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த அமரன் என்பவரை போலிஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கள்ளச் சாராயத்திற்கு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.