அணிக்குள் திரும்பும் கோலி, பண்ட் & ஜடேஜா… யார் யார் இடம் காலி!

Photo of author

By Vinoth

அணிக்குள் திரும்பும் கோலி, பண்ட் & ஜடேஜா… யார் யார் இடம் காலி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி இன்று பர்ஹிங்ஹாம் மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி சில தினங்கள் முன்னர் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அந்த போட்டியில் விளையாடாத பண்ட், ஜடேஜா மற்றும் கோலி ஆகியோர் இன்று பர்ஹிங்ஹாம் மைதானத்தில் நடக்கும் இரனடாது போட்டியில் களமிறங்குகிறார்கள். இதனால் முதல் போட்டியில் விளையாடிய வீரர்கள் சிலரின் இடம் காலியாக உள்ளது.

முதல் போட்டியில் சரியாக விளையாடாத இஷான் கிஷான் அல்லது தீபக் ஹூடா ஆகிய இருவரில் ஒருவர், அக்ஸர் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் இடங்கள்தான் குறிவைக்கப்படும் என சொல்லப்படுகிறது.