உடல் நரம்புகளை வலிமையாக்க உதவும் மூன்று பொருள்!! இப்படி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்!!

0
4

தற்பொழுது பலரும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.நமது உடல் நரம்புகளை இரும்பு போன்று வலிமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி (அல்லது) கம்பு – ஒரு தேக்கரண்டி
2)கொண்டைக்கடலை (அல்லது) பச்சை பயறு – ஒரு தேக்கரண்டி
3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
4)தேன் (அல்லது) பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

படி 01:

முதலில் ஏதேனும் ஒரு சிறு தானிய வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.ராகி,கம்பு போன்ற சிறு தானியங்களில் ஏதேனும் ஒன்றை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

படி 02:

அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு கொள்ளு,பச்சை பயறு,சுண்டல் போன்ற ஏதேனும் ஒரு பயறு வகைகளை சிறுதானியத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

படி 03:

அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு,மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு தண்ணீர் ஊற்றி 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

படி 04:

இப்படி செய்தால் முளைகட்டிய நிலைக்கு வரும்.பிறகு தண்ணீரை வடித்துவிட்டு முளைகட்டிய பொருட்களில் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் நரம்புகள் வலிமை பெறும்.நரம்பு வீக்கம்,நரம்பு வலி,நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகள் குணமாக இந்த முளைகட்டிய பொருட்களை சாப்பிடலாம்.

அதேபோல் கம்பு,ராகி,பச்சை பயறு,கொண்டைக்கடலை மற்றும் வெந்தயத்தை 48 மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக காய வைத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இந்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி தயாரிக்கப்பட்ட பவுடரை சூடான பாலில் கலந்து பருகி வந்தால் நரம்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.

Previous articlePCOD மற்றும் PCOS பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் மற்றும் இதற்கான தீர்வு!!
Next articleநீர்க்கடுப்பு முதல் மலச்சிக்கல் வரை.. இந்த ஒரு விதையை தண்ணீரில் ஊறவைத்து குடித்தாலே நோய்கள் தீரும்!!