12 வருட மும்பை வழக்கில் மூன்று பயங்கரவாதிகளுக்கு சிறைத்தண்டனை

0
152

2008 மும்பை தாக்குதலில் அமெரிக்கர்கள் மற்றும் பிற வெளிநாட்டினர் உட்பட 160 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு மூளையாக இருந்ததாக இந்தியாவும் அமெரிக்காவும் குற்றம் சாட்டிய ஜமாத்-உத்-தாவா (ஜுஐடி)  மூன்று பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாலிக் ஜாபர் இக்பால் மற்றும் அப்துல் சலாம் ஆகியோருக்கு தலா 16 ஆண்டு தண்டனைகள் நான்கு குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது நபர் ஹபீஸ் அப்துல் ரஹ்துமான் மக்கி ஒரு குற்றச்சாட்டில் ஒன்றைரை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மூன்று பேரும் பிப்ரவரி மாதம் மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஹபீஸ் சயீத்தின் கூட்டாளிகள்.

உலகளாவிய நிதி கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாகிஸ்தானை டுப்புப்பட்டியலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக செப்டம்பர் மாத காலக்கெடுவுக்கு முன்னதாக இந்த தண்டனை விதிக்கப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியளித்தவர்கள் மீது வழக்குத் தொடரவும், பயங்கரவாத நிதியுதவிகளைக் கண்காணிக்கவும் நிறுத்தவும் உதவும் சட்டங்களை இயற்றவும் பாகிஸ்தானுக்கு கண்காணிப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

Previous articleகொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 வது இடத்தில் ரஷ்யா
Next articleகொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த கேரள இளம்பெண்