முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்!

0
53
#image_title
முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்!
மழை மற்றும் பனிக்காலம் தொடங்கிய விட்டது. இந்த நேரத்தில் அனைவரும் சரும பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். சருமம் வறட்சி, ஈரப்பதம் குறைதல், கரடுமுரடான சருமம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய மூன்று எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த வழிமுறைகளை நாம் பயன்படுத்தும் பொழுது சரும வறட்சியை தடுத்து ஈரப்பதத்தை அதிகரித்து சருமத்தில் மென்மையான தன்மையையும் பின்னர் முகத்தை பொலிவையும் அதிகரிக்கலாம். அந்த மூன்று வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
அந்த மூன்று வழிமுறைகள்…
1. தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய்…
ஆலிவ் எண்ணெயை அப்படியே நாம். சருமத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் பல நன்மைகள் நமது சருமத்திற்கு கிடைக்கும். அதுவே ஆலிவ் எண்ணெயுடன் நாம் தேனை சேர்த்து பயன்படுத்தும் பொழுது நமது சருமத்தில் வறட்சி என்பது குறையும் ஈரப்பதம் அதிகமாகும். ஆலிவ் எணணெயில் ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் உள்ளது. இதை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது இறந்த செல்களை நீக்கும். பழுதடைந்த செல்கள் இருப்பின் அதை சரி செய்யும்.
ஆலிவ் எண்ணெயை எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சம அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதை முகத்தில் தேய்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மென்மையாக  மசாஜ் செய்து விட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவி விட வேண்டும். இவ்வாறு. செய்து வந்தால் முகம் பொலிவடையும். சருமம் மென்மையாகவும் மாறும்.
2. தேங்காய் எண்ணெய்…
தேங்காய் எண்ணெயை நாம் கூந்தலுக்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் பயன்படுத்தலாம். சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதை சிறிய பவுலிங் சேர்ந்து லேசாக சூடு செய்ய வேண்டும். அதன் பின்னர் இதை இரவு தூங்கச் செல்லும் முன்பு சருமத்தில் வறட்சி உள்ள இடங்களில் தேய்த்து விட்டு படுத்தால் போதும். சருமம் வறட்சி குறைந்து ஈரப்பதம் அதிகரிக்கும். மேலும் சருமம் மென்மையாக மிருதுவாக பொலிவாக மாறும்.
3. பாலாடை மற்றும் பால்…
நாம் பால் மற்றும் பாலாடையை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் பலவிதமான ஆரோக்கியமான மாற்றத்தை கொடுக்கின்றது. பாலாடையை எடுத்து இதனுடன் சிறிதளவு பாலாடை சேர்த்து பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை சருமத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பத்து நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமத்தின். மிருதுவான தனைமை பாதுகாக்கப்படும். மேலும் சருமத்தின். துளைகளுக்குள் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாகும்.