வெப் சீரியஸில் நடிக்கவுள்ள பிரபல நடிகை.!! வெளியான தகவல்.!!

Photo of author

By Vijay

வெப் சீரியஸில் நடிக்கவுள்ள பிரபல நடிகை.!! வெளியான தகவல்.!!

Vijay

சமீப நாட்களாக திரையுலக நடிகர், நடிகைகள் பலர் வெப்சீரியஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் பலர் வெப் சீரியஸில் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் மீண்டும் ஒரு முன்னணி நடிகை வெப்சீரியஸில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான் விரைவில் வெப் சீரியஸில் நடிக்க உள்ளாராம்.

பல கதைகளை கேட்ட பிறகு வெப் சீரியல் நடிக்க ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் சீரியஸ் தெலுங்கில் தயாராக உள்ளதாகவும், இயக்குனர் சூர்யா வங்கலா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சோனி லைவ் ஓடிடி தளத்தில் இது வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை திரிஷா தற்போது ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.