மாத்திரையை தூக்கி போடுங்கள்.. மாதக் கணக்கில் வராத மாதவிடாயும் இதை செய்த உடனே வந்துவிடும்!!

Photo of author

By Divya

மாத்திரையை தூக்கி போடுங்கள்.. மாதக் கணக்கில் வராத மாதவிடாயும் இதை செய்த உடனே வந்துவிடும்!!

உங்களில் பலர் சீரற்ற மாதவிடாய் பாதிப்பை சந்தித்து வருவீர்கள். நீர்க்கட்டி,தைராய்டு, ஹார்மோன் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற சீரற்ற மாதவிடாய் பாதிப்பு ஏற்படுகிறது.இதை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

சீரற்ற மாதவிடாயால் பெண்கள் சந்திக்கும் பாதிப்புகள்:

*அதிக இரத்தப்போக்கு
*வயிற்றுவலி
*கரு உருவாவதில் தாமதம்
*மாதவிடாயின் போது அதிக உடல் சோர்வு

தேவையான பொருட்கள்:-

1)வெல்லம்
2)கருப்பு எள்
3)தேன்

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளை வாணலியில் போட்டு லேசாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி வெல்லத் தூளை எள்ளில் போட்டு போட்டு கலந்து விடவும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் எத்தனை மாதம் வராத மாதவிடாயும் உடனடியாக வந்துவிடும்.

மற்றுமொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)சோம்பு
2)சீரகம்
3)இஞ்சி
4)மஞ்சள் தூள்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து விடவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி சோம்பு மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை
2)தேன்

செய்முறை:-

ஒரு கொத்து கறிவேப்பிலையை நீரில் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் சீரற்ற மாதவிடாய் பாதிப்பு சரியாகும்.