கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட துடிக்கும் கரங்கள் திரைப்படம்!!! தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் சம்பளத்தை திருப்பி கொடுத்த நடிகர்!!

0
194
#image_title

கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட துடிக்கும் கரங்கள் திரைப்படம்!!! தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் சம்பளத்தை திருப்பி கொடுத்த நடிகர்!!

கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் திருப்பி கொடுத்துள்ளார். அவரது இந்த செயல் அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகின்றது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, ஜகமே தந்திரம், கடைகுட்டி சிங்கம், ஆனந்தம் விளையாடும் வீடு பான்ற 35 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் சௌந்தர்ராஜா. தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபல நடிகராக உயர்ந்துள்ளார்.

தற்பொழுது விக்ரம் பிரபு அவர்கள் நடித்துள்ள ரெய்டு திரைப்படத்தில் நடிகர் சௌந்தர்ராஜா அவர்கள் நடித்துள்ளார். ரெய்டு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படத்திலும், நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் உள்பட 6 படங்கள் தன் கைவசம் நடிகர் சௌந்தர்ராஜா அவர்கள் வைத்துள்ளார்.

மேலும் நடிகர் சௌந்தர்ராஜா அவர்கள் மலையாள திரைப்படமான கட்டிங் கேக் என்ற திரைப்படத்தில் முதன்மையான ரோலில் நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் விமல் நடிப்பில் வெளியான துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா அவர்களுக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் துடிக்கும் கரங்கள் திரைப்படம் கொரோனா பரவிய காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட முழு சம்பளம் தொகையையும் தயாரிப்பாளருக்கே நடிகர் சௌந்தர்ராஜா அவர்கள் திருப்பி கொடுத்துள்ளார். அவருடைய இந்த செயல் அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது.

Previous articleவந்தாச்சு தீபாவளி ரூல்ஸ்.. அதற்கு 2 மணி நேரம் அனுமதி! கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்!
Next articleஆந்திர சட்டசபைக்குள் மீண்டும் அலப்பறை செய்யும் தெலுங்கு தேசம் கட்சியினர் !!! விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏ நந்தமூரி பாலகிருஷ்ணா!!!