வந்தாச்சு தீபாவளி ரூல்ஸ்.. அதற்கு 2 மணி நேரம் அனுமதி! கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்!

0
189
#image_title

வந்தாச்சு தீபாவளி ரூல்ஸ்.. அதற்கு 2 மணி நேரம் அனுமதி! கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்!

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.அதன்படி தீபாவளி நாளன்று காலை மற்றும் இரவு என மொத்தம் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடி கொண்டாட்டம் தான் நமக்கு நியாபகம் வரும்.இதனால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அன்று காலை முதலே பட்டாசு வெடிக்க ஆரமித்து விடுவதால் காற்று மற்றும் ஒலி மாசுபாடு அதிகரிக்கும் சூழல் ஏற்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை வித்து வருகிறது.இந்நிலையில் சரவெடி வெடிப்பது தொடர்பான மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இன்று இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்த நிலையில் இதனை விசாரித்த நீதிபதி சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருட்களில் தயாராகும் வெடிகளை வெடிக்க தடை விதித்திருக்கிறது.சுற்றுசூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக பசுமை பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் காற்று,ஒலி ஆகியவற்றை அதிகம் மாசுபடுத்தும் சரவெடி போன்ற பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும் அந்தந்த மாநில அரசின் விதிப்படி தான் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டும்.விதைகளை மீறுபவர்களின் மீது வழக்கு பதியப்படும் என்று எச்சரித்த நீதிபதி சரவெடி வெடிக்க அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.