தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! 

0
108
Thunderstorm warning in Tamil Nadu!! Chennai Meteorological Center Announcement!!
Thunderstorm warning in Tamil Nadu!! Chennai Meteorological Center Announcement!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!!  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் ஜூலை 23 ஆம் தேதி வரை கனமழை  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மழை கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இதனால் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் திருப்பூர், தேனி, சேலம்,மதுரை, புதுகோட்டை, சிவகங்கை,  திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கடலோர பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது மேற்கு திசை கரின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 18 முதல் ஜூலை 23 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கடலோர பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென் இலங்கை கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் அந்தமான் பகுதிகளுக்கும் அதையொட்டி உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Previous articleதினசரி டேட்டா தீர்ந்தாலும் இனி கவலையில்லை!! குறைந்த விலையில் ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!!
Next articleவழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய  லஞ்ச ஒழிப்புத்துறை!!