‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிள் குறித்த மாஸான அப்டேட் ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Photo of author

By Savitha

ஜிப்ரான் இசையில் அனிரூத் குரலில் ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களின் வெற்றியினை தற்போது நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ‘துணிவு’ படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது, படத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்ட நிலையில் படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘வலிமை’ படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத்-அஜித் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார், இப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கொக்கென், மமதி சாரி, அமீர், பாவனி, சிபி மற்றும் சமுத்திரக்கனி போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு போட்டியாக , விஜய்யின் ‘வாரிசு’ படமும் வெளியாகப்போவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இருதரப்பு ரசிகர்களும் சமூக ஊடகங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். ‘வாரிசு’ படத்திலிருந்து இதுவரை ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளிவந்துள்ள நிலையில் ‘துணிவு’ படத்திலிருந்து பாடல் எதுவும் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜிப்ரான் இசையில் அனிரூத் குரலில் ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பாடலில் நடிகர் அஜித் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார் என்றும், மேலும் இந்த பாடலில் பாடலாசிரியர் வைசாக்கும் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.