பட்டபகலில் வீட்டில் இருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மும்பையில் நடந்த கொடூரம்..!

0
101

பெண்ணின் வீட்டிற்கு நுழைந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு நுழைந்தனர்.

அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணை கூர்மையான ஆயுதங்களால் கைகள், கழுத்து, மார்பு பகுதியில் தாக்கி சிகிரெட்டால் சூடு வைத்ததோடு அதனை வீடியோவாக எடுத்த அவர்கள் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.

தனக்கு நடந்த கொடுமையை அண்டை வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பட்டபகலில் வீட்டில் இருந்த பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு அந்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.