நள்ளிரவில் வெளியானது துணிவு.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்…!

Photo of author

By Janani

நள்ளிரவில் வெளியானது துணிவு.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்…!

Janani

அஜித்குமார் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் துணிவு இதில், மஞ்சுவாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்த படம் தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானது. திரையரங்கு வாசல்களில் கட்டவுட்டுகள் வைத்தும் நடனமாடியும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்தை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஸ்டைலிஷான லுக்கில் அஜித் வருவதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் நடித்த வாரிசு திரைப்படம் அதிகாலையில் வெளியானது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.