பெண்களை அச்சுறுத்தும் தைராய்டு புற்றுநோய்!! இதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா?

0
218
Thyroid cancer threatening women!! Do you know what the symptoms look like?
Thyroid cancer threatening women!! Do you know what the symptoms look like?

ஆண் பெண் அனைவருக்கும் தைராய்டு பாதிப்பு பொதுவானவையாகும்.ஆனால் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் தைராய்டு பாதிப்பால் அதிகம் அவதியடைகின்றனர்.இந்த தைராய்டு கட்டியை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறினால் நாளடைவில் அவை புற்றுநோய் கட்டிகளாக மாறக்கூடும்.

தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டு சுரப்பி செல்களில் உருவாகும் ஒருவகை புற்றுநோயாகும்.நமது கழுத்தின் முன்புறம் இருக்கின்ற பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியை தான் தைராய்டு சுரப்பி என்கின்றோம்.இது ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்,வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்தல் போன்ற செய்லகளில் ஈடுபடுகிறது.

தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்:

1)கழுத்து பகுதியில் கட்டி
2)உணவு விழுங்குதலில் சிரமம்
3)தொடர் இருமல்
4)தொண்டை வலி
5)உடல் சோர்வு
6)மூச்சு விடுதலில் சிரமம்
7)தொண்டை கரகரப்பு
8)குரலில் மாற்றம்

தைராய்டு புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்:

1)மரபணு மாற்றம்
2)பரம்பரைத் தன்மை
3)அயோடின் குறைபாடு
4)வயது
5)உடல் பருமன்

இந்த தைராய்டு புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்கிறது.குறிப்பாக 25 முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தைராய்டு சுரப்பியில் உள்ள செல்கள் கட்டுக்கடங்காமல் வளர்வதால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.இந்த புற்றுநோய் தைராய்டு சுரப்பியில் மட்டுமே வளரும்.அதே சமயம் கழுத்து பகுதியில் உள்ள நிணநீர் முனைகளுக்குள்ளும் இது பரவும்.

பெண்கள் தங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதேபோல் தைராய்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம்.

Previous articleபாம்பு கடிபட்டவர்கள் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!! இப்படி செய்தால் விஷம் முறிந்துவிடும்!!
Next articleஇனி ஆயுள் காப்பீட்டிற்கு GST வரி கிடையாது!! விரைவில் குட் நியூஸ் சொல்லப்போகும் மத்திய அரசு!!