பெண்களை மிரட்டும் தைராய்டு பிரச்சனைக்கு சுலபமான தீர்வு

0
333

பெண்களை மிரட்டும் தைராய்டு பிரச்சனைக்கு சுலபமான தீர்வு

தைராய்டு உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பி. இது முன் கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தைராய்டு பிரச்சனை:

சமீப காலங்களில் பல தரப்பு மக்களையும் அதிகம் பாதிப்பது, தைராய்டு பிரச்சினை. என்டோகிரைன் சுரப்பிகளில் உண்டாகும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.

தைராய்டு உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்:

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடல் உணவுவகைகளும் நல்லது. பசலைக் கீரை, எள், பூண்டு ஆகியவை மிகச்சிறந்தது.

தைராய்டு பிரச்சினைக்கு, செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். தைராய்டு வருவதற்கு முக்கிய காரணம் உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள், மனக்கவலை, மன அழுத்தம், டென்ஷன் போன்றவை தான். இதை குறைச்சாலே போதும், தைராய்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

பெண்களுக்கான தைராய்டு அறிகுறிகள்: Thyroid Symptoms in Tamil

பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது. தைராய்டு இரு வகையாக பிரிக்கலாம், குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம்.

தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம், இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படும். குறிப்பாக, பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என வரிசை கட்டி நிற்கும்.

தைராய்டு குணமாக தீர்வு: Thyroid Treatment in Tamil

உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே, தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது.

உணவில் கட்டுப்பாடும், சீரான உடற்பயிற்சியும் கட்டாயம் தேவை. பாஸ்ட் புட் உணவுகளை தவிர்ப்பதன் மூலம், பல நோய்கள் வருவதை ஆரம்பத்திலேயே களைத்து விடலாம்.

Previous articleகிட்னியில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்! விரைவில் குணமாக்கும் எளிய தீர்வு
Next articleஉங்களுக்கு கொழுப்பு கட்டி பிரச்சனை இருக்கா? உடனே கவனியுங்கள்