டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்த ரசிகர்கள்! உச்சக்கட்ட ஆவேச நிலை!
சமீப காலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது இரு தினங்களுக்கு முன்பு கூட புதுச்சேரியில் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் கூறிய தலைமை காவல் அதிகாரி சண்முகம் கைது செய்யப்பட்டார்.இதுபோல பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதில் குறிப்பாக பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடந்த சம்பவம் அனைவரையும் பதைபதைக்க செய்கிறது.
சற்று கூட்டமாக இருக்கும் சாலையில் ரிக்ஷா ஒன்று சென்றுக்கொண்டு இருக்கிறது.அந்த ரிக்ஷாவில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பயணித்து செல்கின்றனர்.அந்த ரிக்ஷாவை ஒட்டி மோட்டார் சைக்கிள் ஒன்றும் செல்கின்றது.அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவர் திடீரென்று ரிக்ஷாவில் தாவி உள்ளார்.திடீரென்று மோட்டார் சைக்கிளில் இருந்து ரிக்ஷாவில் தாவி அந்த நபரை கண்ட பெண்கள் கூச்சலிட்டனர்.அதனையடுத்து அந்த வாலிபர் ரிக்க்ஷாவில் இருந்த ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
முத்தம் கொடுத்ததும் பக்கத்தில் இருந்த பெண் அவரை தாக்க முயன்றுள்ளார்.மேலும் பாதிப்படைந்த பெண் பெருமளவு கூச்சலிட்டுள்ளார்.சுற்றியிருந்த அனைவரும் எதையும் கண்டுகொள்ளவில்லை.ரிக்ஷாவை சுற்றி கார் சைக்கிள் மோட்டார் வண்டி போன்றவைகள் சூழ்ந்துகொண்டது. இது சம்பந்தப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனையடுத்து பாகிஸ்தானில் சுதந்திர தின விழா கடந்த 14ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆக இருப்பது டிக் டாக்.இந்த டிக்டாக்கில் பல பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு இணையாக நடனம் ஆடியும் அல்லது நடித்தும் அப்லோட் செய்து வருகின்றனர்.இதன் மூலம் அவரது நடிப்பை பிடித்து பல ரசிகர்களை உண்டாக்கி கொள்கின்றனர்.
இதனால் நன்மையும் உண்டாகுகிறது தீமையும் உண்டாகிறது என சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.அவ்வாறு டிக் டாக் மூலம் பேமஸான ஒரு பெண்மணி தனது ஆறு நண்பர்களுடன் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பார்ப்பதற்காக சென்றுகொண்டிருந்தார்.அப்பொழுது லாகூரில் இக்பால் பார்க் அருகே வந்தபோது அவரது ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த பெண்ணை சுற்றி வளைத்துக் கொண்டனர்.அவர்களது ரசிகர்களே அந்தப் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து தகாத இடங்களில் தொட்டு துன்புறுத்தினர்.அந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அந்த பெண்மணி தப்பித்து ஓட முயன்றார்.
இருப்பினும் அவ்வளவு பெரிய கும்பலில் இருந்து அப்பெண்ணால் தப்பிக்க முடியவில்லை.அக்கூட்டத்தில் இருக்கும் சிலர் இந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர்.இருப்பினும் அவர்களது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.இதனையும் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.பெண்களுக்கு எதிரான இந்த இரண்டு வீடியோக்களையும் கண்டு அந்நாட்டு மக்கள் பெருமளவு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து இவ்வாறு நடத்துவது வேதனைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.