பிரிட்டனில் அடுத்த வாரத்திலிருந்து விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கவிருக்கிறது.
தோழா, மகரிஷி போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஜெயசுதா, யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, ஷாம், பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையில் இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு அடுக்கடுக்காக பல சிக்கல்கள் எழுந்து வந்தது, இப்போது அவை சரிசெய்யப்பட்டு படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. விஜய்யின் ‘வாரிசு’ படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டனில் அடுத்த வாரத்திலிருந்து விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கவிருக்கிறது, இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை அஹிம்சா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதுகுறித்து நிறுவனம் கூறுகையில் தமிழ் படத்திற்கு இதுபோன்று நான்கு வாரங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நடைபெறுவது பிரிட்டனில் இதுதான் முதல் தடவை என்று கூறியுள்ளது.