Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
88
Breaking: Tomorrow is a holiday for schools and colleges! The official announcement is out!
Breaking: Tomorrow is a holiday for schools and colleges! The official announcement is out!

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தற்பொழுது பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த தாழ்மண்டலமானது தற்பொழுது வரும் பெற்ற மாண்டஸ் என்ற புயல் உருவாகி உள்ளது. இதனால் வானிலை மையம் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறி ரெட் அலார்ட் கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் இன்று கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை காஞ்சிபுரம் திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி காரணமாக இன்று காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட பள்ளிகளுக்கு விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்பொழுது கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாவட்ட மேயர் தலைமையில் மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என கூறியுள்ளனர்.

இதே போல கனமழை அதிகமாக பேசக்கூடும் சென்னை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்க கோரி தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.