வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு!!

Photo of author

By Divya

வாட்ஸ் ஆப் செயலி வழியாகவும் டிக்கெட் புக் செய்யலாம்! வெளியான அட்டகாசமான அறிவிப்பு

 

நவீன காலத்தில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.மேலும் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டதால் வேலைகளும் சுலபமாக இருக்கின்றது.அதே சமயம் மக்களுக்கு நிறைய நேரம் மீதம் ஆகின்றது.

 

மேலும் ரயில் போக்குவரத்திற்கு அடுத்து மக்கள் அதிகம் பயன்படுத்துவது பேருந்து போக்குவரத்தை தான்.இந்நிலையில் ரயில்வே துறையில் நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி தற்பொழுது பேருந்து பயணத்திற்கும் வந்து விட்டது.இதனால் மக்கள் மணிக்கணக்கில் டிக்கெட் முன்பதிவு அலுவலகங்கள் முன் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

மேலும் பேருந்து போக்குவரத்தில் நீண்ட தூர பயணத்திற்கு இந்த டிக்கெட் முன்பதிவு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.மேலும் இந்தியாவில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கு பல்வேறு ஆன்லைன் செயலிகள் இருக்கின்றன.அதில் ரெட் பஸ்,அபிபஸ்,மேக் மை ட்ரிப்,பேடிஎம் பேருந்து முன்பதிவு போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய தெரியாமல் பலர் சிரமப்பட்டு வருகின்றனர்.

 

அவர்களுக்காக பிரபல ரெட் பஸ் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.இதன் மூலம் புக்கிங் செய்வது இன்னும் சுலபம் என்றும் மொபைலில் டைப் செய்ய தெரிந்தாலே போதும் என்றும் அந்நிறுவன தலைமை வணிக அதிகாரி மனோஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.மேலும் இந்தியாவில் எந்த ஒரு மாநிலம் மற்றும் மாவட்டத்திற்க்கும் செல்வதற்கு வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.மேலும் இந்த சேவை 24 மணி நேரமும் மக்களுக்கு வழங்கபடும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இந்த புதிய வசதிக்கு ‘ரெட்பஸ் வாட்ஸ்அப் சாட்பாட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்று அவர்

தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் கூறுகையில்,

 

எங்கள் சேவையை பெற நினைக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் வாட்ஸ்அப் செயலியில் எங்கள் மொபைல் எண்ணிற்கு பெயர் மற்றும் முகவரி விவரம் கொடுத்திருந்தால் போதும் அவர்கள் ஆன்லைன் டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும்.

 

வாட்ஸ்அப் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்த தகவல்

 

முதலில் பயனாளர்கள் காண்டாக்ட் லிஸ்டில் ‘வாட்ஸ்அப் சாட்பாட்’ என்ற மொபைல் எண்ணை (8904250777) சேமிக்க வேண்டும்.இது ரெட் பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள மொபைல் எண் ஆகும்.பின்னர் வாட்ஸ்அப் செயலியில் அந்த எண்ணிற்கு ஹாய் (Hi) என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.பிறகு மொழியை தேர்வு செய்ய சொல்லும்.அதில் ஆங்கிலம் (English) அல்லது இந்தி (Hindi) மொழி இடம் பெற்றிருக்கும்.அதில் ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

 

ஒருவேளை பயனாளர் ஆங்கில மொழியை தேர்வு செய்திருக்கிறார் என்றால் அடுத்து அவர் மேற்கொள்ள வேண்டியவை;

 

மொழி தேர்விற்கு பின் ‘புக் பஸ் டிக்கட்’ (Book Bus Ticket) என்ற ஒரு ஆப்சன் வெளிப்படும்.அவற்றை டச் செய்தல் வேண்டும்.பிறகு பயனாளரின் லொகேஷனை சரிபார்க்க அனுமதி கேட்கும்.அதற்கு பயனாளர் அனுமதி வழங்க வேண்டும்.அதன் பிறகு பயனாளர் பயணம் செய்ய உள்ள தேதி மற்றும் இடம் குறித்த விவரங்கள் கேட்கும்.

 

இந்த தகவல்களை கொடுத்த பின் அடுத்து ஏசி (AC) மற்றும் ஏசி அல்லாத (NON AC) பேருந்துகளின் பட்டியலை காண்பிக்கும்.அதில் பேருந்துகள் எந்த நேரத்திற்கு மற்றும் எந்த இடத்திற்கு செல்லும் என்ற விவரம் கொடுக்கப்பட்டிருக்கும்.இந்நிலையில் பயனாளர்களின் வசதிக்கேற்ப பேருந்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

 

அடுத்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான பக்கம் தோன்றும்.அதில் பயனாளர்கள் பயன்படுத்தும் கூகுள் பே (Google Pay),போன் பே (PhonePe) போன்ற செயலிகள் மூலம் பணம் செலுத்தலாம்.மேலும் வங்கிகளின் டெபிட்,கிரெடிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் பேங்கிங் போன்றவை மூலமும் பணம் செலுத்தலாம்.

கடைசியாக பயனாளர் பெயர்,அவர் தேர்வு செய்த பேருந்து புறப்படும் நேரம் மற்றும் இடம்,டிக்கெட் விலை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இ-டிக்கெட்டை (e-ticket) பயனாளர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் அதை காண்பித்தாலே போதும் பேருந்தில் அனுமதி வழங்கப்படும்.

 

மேலும் ரெட் பஸ் பயனாளர்கள் டிக்கெட் புக் செய்த பின்னர் ரத்து செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் ஆப்சன் இருக்கின்றது.மேலும் பஸ் டிராக்கிங் அம்சங்களும் இந்த வாட்ஸ்அப் சாட்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.