நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..

0
37

 

 

 

நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..

 

 

கடந்த மாதம் கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் இல்லத்திலும் அவரது சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் நேரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெடித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லலை. இதுகுறித்து, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டது.

 

 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார்.

 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின் போது தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. சிறிது நாட்களுக்குப் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

நீதிமன்றத்திலும் இது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. செந்தில் பாலாஜி அவர்களின் தரப்பில் அவரது மனைவி தாக்கல் செய்த வழக்கு விசாரணை நாளுக்கு நாள் அரசியல் வட்டாரங்களில் புதிய புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் செந்தில் பாலாஜி முழுவதுமாக வந்து சிக்கியுள்ளார்.

 

 

மேலும், விசாரணையில் திமுக முக்கிய புள்ளிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த அமலாக்கத்துறைப்பிடியில் சில திமுகவில் முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள் என்றும் தெரிகிறது.

 

 

இந்நிலையில், கரூரில் கட்டுமானத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலாவின் பங்களா, இடத்தை அமலாக்கத்துறை முடக்கியது. இது திமுகவினருக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

மற்றொரு திமுக அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ஆடியோ விவகாலத்தில் குறிப்பிட்டது போல, 3000 கோடி ரூபாய் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், செந்தில் பாலாஜி அவர்கள் தனது மனைவி பெயரில் புதிதாக கட்டும் பங்களா முன் செல்பி ஒன்றை எடுத்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து, ஒரே மாதத்தில் செந்தில் பாலாஜியின் புது பங்களா அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

author avatar
Parthipan K