டிக் டாக் காதல்! 16 வயது சிறுமி கர்ப்பம்! மாற்று சமூகம் என்பதால் கருக்கலைப்பு!

Photo of author

By Kowsalya

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்காடு பகுதியில் வசிக்கும் சாந்தகுமாரிற்க்கும் சென்னையில் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள 16 வயது சிறுமியுடன் டிக் டாக் மூலம் காதல் மலர்ந்த நிலையில் நண்பர்கள் மூலமாக திருமணம் செய்து சிறுமி கர்ப்பம் ஆக உள்ள நிலையில் வேற்று சமூகம் என்று தெரிந்ததால் பெண்ணை ஏமாற்றி கருகலைப்பு செய்து வீட்டிற்குள் நுழைய விடாமல் செய்த மகன் வீட்டார். இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு கூட முடிக்காத நிலையில் உள்ள சிறுமி சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர். டிக் டாக் மோகத்தால் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகியவர்களுக்கு பின் காதல் மலர்ந்துள்ளது.

அந்த சிறுமி காதலனை தேடி ராணிப்பேட்டைக்கே வந்துள்ளார். அங்குள்ள தீர்த்தகிரி கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார்.

மகனுக்கு திருமணம் முடிந்த செய்தியைக் கேட்ட மகன் வீட்டார் மனதை மாற்றிக் கொண்டு மகனைப் பார்க்க வந்துள்ளனர். அப்பொழுது அந்த பெண்ணின் விவரம் பற்றி விசாரித்த பொழுது அந்தப் பெண் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனால் எப்படியாவது அந்தப் பெண்ணிடமிருந்து மகனை பிரித்துவிட வேண்டும் என்று போலி டாக்டரிடம் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

கருக்கலைப்பு செய்த உடன் மகன் வீட்டார் தன் வேலையை காண்பித்து அந்த பெண்ணை வீட்டிற்கு உள்ளே நுழையவிடாமல் பிரச்சனை செய்துள்ளனர். இந்த பிரச்சனை ராணிப்பேட்டையில் உள்ள மகளிர் காவல்நிலையத்திற்கு தெரியவரவே அந்த 16 வயது சிறுமியை மீட்டு குழந்தை திருமணம் செய்துகொண்ட சாந்தகுமாரையும் மற்றும் கருக்கலைப்பு செய்ய காரணமாக இருந்த சாந்தகுமாரின் தாய் வளர்மதி, சித்தி மற்றும் மாமா செல்வராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதேபோல் சட்டத்திற்கு முரண்பாடாக கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் பாஷாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். டிக் டாக் மோகத்தால் வாழ்க்கை என்னவென்று தெரிவதற்கு முன்பே வாழ்க்கை முடிந்து விட்ட அந்த பெண்ணை மறுபடியும் அவர் தந்தை ஏற்றுக்கொண்டு கூட்டிச் சென்று உள்ளார்.