TikTok பாகிஸ்தானி பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த ஆண்! ஓடும் ரிக்ஸாவில் அவலம்!

மீண்டும் பாகிஸ்தானி பெண்ணை ரிக்ஷாவில் போய்க் கொண்டிருக்கும் போது ஆண் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரில் ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானிய பெண் டிக்டோக்கர் ஆண்களால் தாக்கப்பட்ட ஒரு பயங்கரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது, நெட்டிசன்களிடமிருந்து கடுமையான கண்டனத்தைத் தூண்டியது அந்த வீடியோ, அதே நாளில் இருந்து மற்றொரு வீடியோ வெளிவந்து உள்ளது. ஓடும் ரிக்ஷாவில் இந்த அவலம் அந்த பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது.

 

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் திறந்த ரிக்ஷாவில் இரண்டு பெண்கள் பயணித்து கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று வாகனத்தின் புட்போர்டில் குதித்து கன்னத்தில் முத்தமிட்டு உள்ளான்.

 

பாகிஸ்தானில் ஒரு பரபரப்பான தெருவில் எங்கோ ஒரு ரிக்ஷாவின் பின்புறத்தில் இரண்டு பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே சிறு குழந்தையும் அமர்ந்துள்ளது. அது லாகூர் பகுதியை சேர்ந்தது என்று தெரிய வருகிறது.

 

 

இரண்டு பெண்களும் ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பொழுது இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆண்கள் அவர்களை தொந்தரவு செய்த படியே பின் தொடர்கிறார்கள். திடீரென்று எங்கிருந்தோ ஒரு மனிதன் ரிக்ஷாவில் ஏறி குதித்து அந்த பாகிஸ்தானி பெண்ணை முத்தமிடுகிறான். அலறும் சத்தம் கேட்டவுடன் மறுபடியும் குதித்து விடுகிறான். பாகிஸ்தானில் இந்த மாதிரியான சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment