திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ!

0
246
Time slot token system to be re-introduced in Tirupati! Here are the instructions!
Time slot token system to be re-introduced in Tirupati! Here are the instructions!

திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ!

நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்கதர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றி வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்பரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறையை ரத்து செய்யப்பட்டது. பக்கதர்களின் வசதிக்கேற்ப கடந்த அறக்காவலர் குழு கூட்டத்தின்போது பக்தர்களுக்கு மீண்டும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடும் டைம் ஸ்லாட் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் தினமும் பக்கதர்களுக்கு வழங்கப்படும்.மேலும் அந்த டோக்கன்  திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ,சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம் 2ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளது. அதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரத்தில் சனி, ஞாயிறு ,திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20ஆயிரம் முதல் 25ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும் ,செவ்வாய் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் பக்தர்களின் வருகையை பொருத்து டைம் ஸ்லாட் டோக்கன் விநியோகிக்கும் எண்ணிக்கையை அதிகரித்தும் குறித்தும் வழங்கப்படும்.

டைம் ஸ்லாட் டோக்கங்களின் ஒதுக்கீடு அன்றைய தினத்தில் முடிந்து விட்டால் பக்கதர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகம் 2 க்கு சென்று சாமி தரிசனத்திற்கு அவரவர்களின் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்

Previous articleபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா! முதல்வர் பங்கேற்காததன் உண்மையான காரணம் இதுதானா?
Next articleநடுரோட்டில் ஐட்டம் பாட்டுக்கு மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்! வைரலாகும் வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here