பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா! முதல்வர் பங்கேற்காததன் உண்மையான காரணம் இதுதானா?

0
62

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்று இரவு எட்டு மணி அளவில் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏழாவது மாடியில் இருக்கின்ற மையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த பரிசோதனையானது முதல்வருக்கான முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனையை தான் முதலமைச்சர் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது.

அதோடு மருத்துவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நீண்டதூர பயணத்தை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் வருடம் தோறும் அக்டோபர் மாதம் 28, 29 மற்றும் 30 உள்ளிட்ட 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா விமர்சையாக தமிழக அரசு சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த வருடம் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பசும்பொன்னில் நடைபெற்று வருகின்றன. நாளைய தினம் தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா 60-வது குருபூஜை விழா உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இதில் தற்போதைய தமிழக முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் பங்கேற்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தான் நேற்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் முதுகு வலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனையை மேற்கொண்டார். அதில் அவர் நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கினர்.

ஆகவே நாளைய தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொண்டில் நடைபெற உள்ள தேவர் குருபூஜையில் முதல்வர் அவர்களின் சார்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே என் நேரு, அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் நேரில் பங்கேற்று கொண்டு மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சென்ற ஆண்டு நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவில் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்த போது பங்கேற்றுக் கொண்டார்.

அப்போது தேவர் குருபூஜை விழா முடிவடைந்த பிறகு அங்கே எல்லோருக்கும் விபூதி வழங்கப்பட்டது. அதன்படி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களுக்கும் விபூதி வழங்கப்பட்டது.

ஆனால் கடவுள் இல்லை என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஏங்கிவரும் திமுகவின் தலைவரான ஸ்டாலின் தனக்கு இடப்பட்ட விபூதியை அந்த இடத்திலேயே அழித்தார்.

இது தேவர் இனத்தைச் சார்ந்தவர்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பொறுத்தவரையில் தேவர் இனத்தைச் சார்ந்த எல்லோரும் அவரை ஒரு மாபெரும் தெய்வமாக கருதி வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் தேவர் குருபூஜையில் தனக்கு வழங்கப்பட்ட விபூதியை அந்த இடத்திலேயே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அழித்தார்.

ஆகவே தேவர் இனத்தைச் சார்ந்த அனைவரும் ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் இருந்தார்கள் அதோடு தேவர் சமூகத்தைச் சார்ந்த ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழாது என்று கடும் கோபத்துடன் அந்த சமூகத்தைச் சார்ந்த முக்கிய நபர்கள் பலர் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் அப்போது தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய பூதாகரமாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் தன்னுடைய முதுகு வலியை காரணம் காட்டி இந்த தேவர் குருபூஜை விழாவிற்கு வருவதை தவிர்த்து இருப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது.

அதாவது தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தேவர் குருபூஜை விழாவிற்கு சென்ற தன்னை அவமானப்படுத்திய தேவர் இன மக்கள் திருவிழாவாக நினைக்கும் இந்த குருபூஜை விழாவில் தற்போது முதல்வராக இருக்கும் தான் எதற்காக பங்கேற்க வேண்டும் என்று ஸ்டாலின் எண்ணியிருக்கலாமோ என்ற சந்தேகம் மிக வலுவாகவே எழுகிறது.

ஆனால் ஸ்டாலின் அவர்களுக்கு முதுகு வலி இருப்பதால் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள் என்று சொல்வது உண்மைதானா அல்லது இந்த குருபூஜை விழாவில் பங்கேற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக முதல்வர் சொல்லும் கட்டுக்கதையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.