நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு கண்கள்.இது மிகவும் மென்மையான உறுப்பாக உள்ளது.ஆனால் நாம் அதற்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
அதிக நேரம் டிவி பார்ப்பது,லேப்டாப்,மொபைல் போன்றவற்றை அதிக பிரைட்னஸ் வைத்து பார்ப்பது போன்ற செயல்பாடுகளால் கண் பார்வை மங்கி கண்ணாடி அணியும் நிலைக்கு ஆளாகின்றோம்.எனவே பார்வை குறைபாட்டை போக்க சில வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண் பார்வையை கூர்மையாக்கும் உணவுகள்
தினமும் 5 பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.பாதாமில் உள்ள வைட்டமின் ஈ,ஒமேகா கொழுப்பு அமிலங்கள் கண் பார்வையை அதிகரிக்கும்.
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருகி வந்தால் கண் பார்வை குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்.
தினம் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.மஞ்சள் கருவில் உள்ள புரதங்கள் கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது.பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.இதில் உள்ள லுடின் கண் சிதைவை தடுக்க உதவுகிறது.தக்காளி,சிட்ரஸ் போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீனை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.