ஆரோக்கியமாக இளமையாக இருக்க! ஹீமோகுளோபின் அதிகரிக்க! வாரம் 2 முறை குடிங்க!

Photo of author

By Kowsalya

ஆரோக்கியமாக இளமையாக இருக்க! ஹீமோகுளோபின் அதிகரிக்க! வாரம் 2 முறை குடிங்க!

மிகவும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க இந்த ஜூஸை நீங்கள் வாரம் இரண்டு முறை மட்டும் குடித்து வாருங்கள் நிச்சயமாக உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த ஜூஸை நீங்கள் தினமும் குடித்து வரும் பொழுது 70 வயது ஆனாலும் சரி உங்களுக்கு 20 வயது ஆரோக்கியம் பெற இது உதவும்.

தேவையான பொருட்கள்

1. வெள்ளரிக்காய் அரை
2. இஞ்சி ஒரு துண்டு
3. நெல்லிக்காய் 4
4. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
5. புதினா இலை ஒரு கைப்பிடி
6. கருவேப்பிலை சிறிதளவு
7. எலுமிச்சை பழம் ஒன்று
8. மிளகுத்தூள் சிறிதளவு.

செய்முறை:

1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதில் வெள்ளரிக்காயில் பாதியை மட்டும் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. பெரு நெல்லிக்காயை 4 வாங்கி தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி போட்டுக் கொள்ளவும்.
4. அரைத்துண்டு இஞ்சியை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளவும்.
5. கொத்தமல்லி இலை புதினா இலை கருவேப்பிலை இலை ஆகிய அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
6. இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
7. இப்பொழுது இரண்டு டம்ளர்களில் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
8. இரண்டு டம்ளரில் அரை பழம் அளவிற்கு எலுமிச்சை பழச்சாற்றை புரிந்து கொள்ளவும்.
9. சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
10. தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

வாரம் இரண்டு முறை மட்டும் இதனை நீங்கள் குடித்து வந்து பாருங்கள் நிச்சயமாக மாற்றத்தை உணருவீர்கள்.